தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியம் தாசரஹள்ளி அப்துல் கலாம் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் 2,நிமிடம் மௌன அஞ்சலி இருந்தனர் தாசரஹள்ளி வளர்ச்சி குழு ஏற்பாட்டின் மூலம், தருமபுரி ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகம், பேனா மற்றும் பொது மக்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தாசராஹள்ளி பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி ரங்கநாதன் , தருமபுரி ரோட்டரி கிளப் தலைவர் குமரன், செயலாளர் சரவணன், பொருளாளர் இளவரசன் மற்றும் தாசரஹள்ளி வளர்ச்சி குழு இளைஞர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக