ஓசூர் நியூ ஏ.எஸ்.டி.சி. அட்கோ பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 41). இவர் கெலமங்கலத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாக அதிகாரியாக உள்ளார். மத்திகிரி பகுதியில் உள்ள தனது நிலத்தை விற்ற ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துடன் காரில் பள்ளிக்கு வந்தார்.
காரில் பணத்தை வைத்து விட்டு, பள்ளி வளாகத்தில் காரை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து அவர் வந்து பார்த்தபோது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் காரில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் திருட்டு போய் இருந்தது. இது குறித்த புகாரின் பேரில் கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக