ஜீவன் ரக்ஷா பதக்க விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 28 ஜூலை, 2021

ஜீவன் ரக்ஷா பதக்க விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


ஜீவன் ரக்ஷா பதக்க விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது - மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி.இ.ஆ.ப., அவர்கள் தகவல். இந்திய அரசின் சார்பில் பல்வேறு நிகழ்வுகளான நீரில் முழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துகள், விபத்துகள், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு கீழ்க்காணும் பிரிவுகளில் ஜீவா ரக்ஷா பதக்க விருதுகள் வழங்கி வருகிறது.

சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் - மீட்பவரின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலையில் ஆபத்து நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்பவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் - துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

ஜீவன் ரக்ஷா பதக்கம் - தனக்கு காயம் ஏற்படினும், வீரத்துடன் தாமதமின்றி செயல்பட்டு உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு இவ்விருதுவழங்கப்படும். இந்த விருதுகளுக்கு அனைத்து தரப்பு பாலினத்தவர்களும் தகுதியுடையவர்கள். ஆயுதப்படை, காவல் படை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் இவ்விருதுக்கு தகுதியுடையவர்கள்.

ஆனால் அவர்களுடைய பணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. மேலும் இந்த விருதுக்கான பரிந்துரைகள் இரண்டு வருட காலத்திற்குள் இருத்தல் வேண்டும்.
அதாவது 01.10.2019க்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் மட்டுமே விருதிற்கு பரிசீலிக்கப்படும்.

அதன்படி, 2021ம் ஆண்டிற்கான ஜீவன் ரக்ஷா பதக்க விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்காணும் விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்கள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பெற்றுக் பூர்த்தி செய்து 05.08.2021 அன்று மாலை 05.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் பரிந்துரையுடன்தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad