தர்மபுரியை அடுத்த சோகத்தூரில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. முழு ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த இந்த கோவிலை திறக்க நேற்று முன்தினம் பூசாரிகள் சென்றனர்.
அப்போது கோவிலின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த தங்கத்தாலி, வெள்ளி பொருட்கள், ரூ.5 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. ஊரடங்கால் மூடப்பட்டு இருந்த கோவிலுக்குள் மர்ம நபர்கள் புகுந்து நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
இதுதொடர்பாக கோவில் நிர்வாகிகள் தர்மபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக