மேதகு. அப்துல் கலாம் அய்யா அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை மருதம் நெல்லி கல்வி குழுமம் தலைவர் Dr.K.கோவிந்த் அவர்களின் தலைமையில் தருமபுரி நல்லானூர் மருதம் நெல்லி ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அனுசரிக்கப்பட்டது. இதில் கல்லூரி முதல்வர், துணை முதல்வர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் மேதகு. அப்துல் கலாம் அய்யா அவர்களுக்கு மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.
அப்துல் கலாம் அய்யா கூறிய ஆசிரியர்களுக்கான பதினொன்று உறுதிமொழியினை பேராசிரியர்கள் அனைவரும் ஏற்றனர். இந்த நிகழ்வில் அப்துல் கலாம் அய்யா அவர்களின் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக