"மக்களைத் தேடி மருத்துவ திட்டம்” என்ற திட்டத்தினை ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் முதல்வர் தொடங்கிவைக்கிறார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 27 ஜூலை, 2021

"மக்களைத் தேடி மருத்துவ திட்டம்” என்ற திட்டத்தினை ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் முதல்வர் தொடங்கிவைக்கிறார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் "மக்களைத் தேடி மருத்துவ திட்டம்” என்ற திட்டத்தினை ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தொடங்கிவைக்கிறார்.


தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வின்போது, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், தகவல். 


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் பரிசல் ஓட்டிகளுக்கான தடுப்பூசி முகாம், பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை கோவிட் சிகிச்சை மையம், பிராணவாயு உற்பத்தி மையம் அமைக்கும் பணிகள், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய மகப்பேறு பிரிவு கட்டிடப் பணி, கர்ப்பிணி மற்றும் பிரசவித்த பெண்களுக்கான தடுப்பூசி முகாம் ஆகியவற்றை மாண்புமிகு ம ருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். 

அதனை தொடர்ந்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில், நடைபெற்றது. தொடர்ந்து, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தருமபுரி மாவட்டத்தில் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக இன்று காலை முதல் ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டிகளுக்கான தடுப்பூசி செலுத்தும் முகாம், கர்ப்பிணி தாய்மார்களுக்கான வேறு காலப்பெட்டகம் வழங்குதல், கொரோனா மூன்றாவது அலை தடுப்பு நடவடிக்கையாக, பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதலாக 100 படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பிராண்டிவாயு உற்பத்தி மையம் அமைக்கும் பணிகள், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வளாகத்தில் ரூ.12 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான பிரிவு அமைப்பதற்கான கட்டிட பணிகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் ஆகியவற்றை குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் பகுதி என்பது மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும் சுற்றுலா தளத்தில் பரிசல் ஒட்டுதல் மசாஜ் செய்தல் மீன் உணவு சமைத்தல் உள்ளிட்ட பணிகள் இங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாராமாக விளங்குகிறது. ஒகேனக்கல் பகுதியில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை உள்ளது உள்ளதால் பரிசல் ஓட்டுபவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி என்பது மிகவும் இன்றியமையாததாகும். தமிழகத்தில் இதுபோன்று சுற்றுலாத்தலமாக விளங்கும் இடங்களிலும் ஆன்மிக சுற்றுலாத் தலமாக விளங்கும் ராமேஸ்வரம், திருவண்ணாமலை, நாகூர், மற்றும் வேளாங்கண்ணி உள்ளிட்ட பல இடங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் அளித்து மேற்கொண்டு வருகிறது.

தருமபுரி மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா இரண்டாம் அலையில் அதிகபட்சமாக கடந்த மே மாதம் 25ஆம் தேதி 359 என்ற அளவில் இருந்துள்ளது. இந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து நேற்றைக்கு 29 என்ற அளவில் மிகவும் குறைந்துள்ளது தமிழகத்தைப் பொருத்தவரையில் கொரோனா நோய்த்தாக்கம் உச்சபட்சமாக மே மாதம் 21ஆம் தேதி 31,184 என்ற அளவில் பதிவாகியுள்ளது இந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து நேற்றைக்கு 1,785 ஆக குறைந்துள்ளது நோய் தாக்கம் குறைந்த வண்ணம் இருந்த போதிலும் நம்மை விட்டு முழுமையாக இன்னும் விலகவில்லை, இதனை கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கூடுதல் படுக்கை வசதிகள், கூடுதல் ஆக்சிஜன் வசதிகள் உள்ளிட்ட மூன்றாம் அலை தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தைப் பொறுத்தவரையில் அனைத்து மருத்துவமனைகளிலும் மூன்றாம் அலையை எதிர்கொள்ள தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உரிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தாக்கத்தை கட்டுக்குள் கொண்டு வந்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் நடவடிக்கைகளை செயல்படுத்தியது மட்டுமன்றி களப்பணிகளையும் மேற்கொண்டு, அதன்மூலம் மக்களுக்கு புது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்கள். கடந்த இரண்டு மாதங்களாக அதிகரித்து வந்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது படிப்படியாக குறைந்து முழுமையாக கட்டுக்குள் வரும் நிலை உருவாகி உள்ளது.

மேலும் தமிழகத்தில் ”மக்களைத் தேடி மருத்துவ திட்டம்” என்ற திட்டத்தின் கீழ் மருத்துவர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று பரிசோதித்து மருந்துகள், பிசியோதெரபி, டயாலிசிஸ் போன்ற சிகிச்சைகள் வழங்கிடும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்கள். இத்திட்டத்தின் கீழ் நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கு பொதுமக்கள் சிரமமின்றி மருந்துவ சிகிச்சை, ஆலோசனை மற்றும் மருந்துகள் பெற வாய்ப்பாக அமையும்.

இந்த சீரிய திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடுத்த மாதம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் கிருஷ்ணகிரி அல்லது தருமபுரி மாவட்டத்தில் தொடங்குவது குறித்து மருத்துவ துறை அலுவலர்களுடன் இன்று நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் எனம் இத்திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வருகின்ற ஆகஸ்ட் முதல் வாரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கி வைக்க உள்ளார் அதைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் ரூ.12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான பிரிவு அமைப்பதற்கான கட்டிடப் பணிகள் நிறைவடைந்ததை ஒட்டி அதனையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைக்க உள்ளார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுரைப்படி, பல்வேறு தொடர் தடுப்பு நடவடிக்கைகள் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதேபோல, மூன்றாம் அலை வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் வகையில், கூடுதல் படுக்கைகள், ஆக்சிஜன் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல, கரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மலை கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு தடுப்பூசி குறித்து போதிய விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், தற்போது தடுப்பூசி செலுத்திக்கொள்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மலை கிராமங்கள் அதிகமுள்ள நீலகிரி மாவட்டத்தில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், பெட்ட முகிலாலம் உள்ளிட்ட 8 மலை கிராமங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்திலும் மலை கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 


இப்பணிகள் மேலும் தீவிரப்படுத்தி அனைத்து மலை கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கும் முழு அளவில் தடுப்பூசிகள் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதயம் உள்ளிட்ட அனைத்து சிறப்பு மருத்துவ சிகிச்சைப் பிரிவுகளை மேம்படுத்துவது தொடர்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் வெளியாக வாய்ப்புள்ளது. தருமபுரியில் செவிலியர் கல்லூரி தொடங்க வேண்டும் என்கிற கோரிக்கை குறித்து பரிசீலனை செய்யப்படும்.


கொரோனா தடுப்பூசிகளைப் பொறுத்த வரையில் ஒன்றிய அரசின் மூலம் தமிழ்நாடு அரசுக்கு 2,21,98,690 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை தமிழ்நாடு அரசு சார்பில் 1,97,98,121 பேருக்கும் தனியார் மருத்துவமனைகளில் 14,22,108 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கையிருப்பாக 14.47 இலட்சம் தடுப்பூசிகள் மட்டும் உள்ளது. தருமபுரி மாவட்டத்தை பொருத்தவரையில் மொத்த மக்கள் தொகையில் 12 லட்சத்து
57 ஆயிரத்து 760 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அவர்களில் 3 லட்சத்து 80 ஆயிரத்து 450 நபர்களுக்கு இதுவரை தடுப்பு செலுத்தப்பட்டுள்ளது. அதாவது நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 30% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இப்பணிகளை சிறப்பாக மேற்கொண்ட அனைத்து அலுவலகங்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன் என மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். 

முன்னதாக, தருமபுரி மாவட்டத்தில் முதல்முறையாக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் ரூ.6.39 இலட்சம் செலவில் செல்வன் ஆத்விக் என்ற நான்கு வயது சிறுவனுக்கு காது வால் நுண் உள் வைப்பு கருவி பொருத்தும் சிகிச்சை தருமபுரி அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக மேற்கெள்ளப்பட்டதை அடுத்து மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் அச்சிறுவனிடம் நலம் விசாரித்தார். பின்னர் தருமபுரி மாவட்டத்தில் உள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இனணக்கப்பட்ட 9 தனியார் மருத்துவமனைகள் இணைந்து சமூக பங்களிப்பு நிதி திட்டத்தின் கீழ் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிக்காக ரூ.500000/-கான காசோலைகளை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்களிடம் வழங்கினர். 


இந்த ஆய்வின் போது, தேசிய சுகாதார இயக்க பணிகள் திட்ட இயக்குநர் மரு.தாரேஷ் அகமது,. இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர் / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு.வைத்தியநாதன்,இ.ஆ.ப., தருமபுரி கூடுதல் ஆட்சியர் திருமதி.சித்ரா விஜயன்,இ.ஆ.ப., சுகாதாரப்பணி இயக்குநர் மரு.செல்வவிநாயகம், கூடுதல் இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி டாக்டர் மரு.மாலதி பிரகாஷ், மருத்துவக்கல்வி இயக்ககம் இயக்குநர் மரு.நாராயணபாபு, இணை இயக்குநர் மரு.மலர்விழி, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வார் மரு.அமுதவல்லி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் மரு.ஜெமினி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.இன்பசேகரன், திரு.தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad