மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் சாமாண்டஹள்ளி, தாசிரஹள்ளி போளையம் பள்ளி, தொப்பம்பட்டி ஆகிய ஊராட்சியில் ஒவ்வொருவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், அடிக்கடி சோப்பு போட்டு அல்லது சேனிடேசர் கொண்டு கை கழுவ வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
குறிப்பாக அனைவரும் COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியை எண்ணங்களின் சங்கமம்(NDSO) என்ற அறக்கட்டளையின் சார்பாக பொதுமக்கள் மத்தியில் மிகச் சிறப்பாக தப்பாட்டம், நாடகம், பாடல் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை ஊராட்சி மன்ற தலைவர்களான, திரு. மாசிலாமணி, திரு. தமிழ்ச்செல்வி ரங்கநாதன், திருமதி.கலைமணி மாயக்கண்ணன் மற்றும் சரிதா ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக