தருமபுரி அருகே உள்ள ராஜாகொல்லஅள்ளி தீப்பெட்டி கிராமத்தில் கிமு ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்த கற்கால மனிதர்களின் கல்திட்டைகளை தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் அவர்கள் பார்வையிட்டார். அப்போது பேசிய அவர் பின்வருமாறு தெரிவித்தார்.
65 ஏக்கர் பரப்பளவில் 200க்கும் மேற்பட்ட கல்திட்டைகள் உள்ளன. கல்திட்டைகள் ஆதிமனிதன் ஈமக்குழிகளாக கருதப்படுகின்றன. கல்திட்டை குறித்து தொல்லியல் துறை ஆய்வு செய்து பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது. கல் திட்டைகளை சில சமூக விரோதிகள் சேதப்படுத்தி வருகிறார்கள். எனவே இப்பகுதி முழுவதும் வேலி அமைத்து வெளிஆட்கள் நுழையாத வகையில் பாதுகாக்க வேண்டும்.
கல் திட்டைகளை அகழ்வாராட்சி செய்தால் இப்பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை வெளியுலகத்திற்கு தெரியவரும். ஏற்கனவே இப்பகுதியில் மேற்கொண்ட ஆய்வில் கற்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருள்கள் என்பது கண்டறியப்பட்டது.
எனவே தொல்லியல் துறையினர் கல்திட்டைகள் ஆராய்ந்து அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும். இப்பகுதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து கடிதம் அளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக