பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு அரூர் பகுதியில் மரக்கன்று நட்ட கட்சியினர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களின் 83வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அக்கட்சியின் தர்மபுரி மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தியின் ஆலோசனைப்படி அரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட முத்தனூர் கிராமப்பகுதியில் இன்று மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில அரூர் ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல். சேகர். மூத்த கட்சி நிர்வாகிகள் திருவேங்கடம் துணைச் சேர்மன் வன்னிய பெருமாள் நகரச் செயலாளர் ஐயப்பன் நகர தலைவர் பெருமாள் தண்டபாணி, பழனிச்சாமி, சிங்காரம், வெங்கடேசன், விக்னேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக