திருடப்பட்ட குழந்தையை மீட்ட காவலர்களுக்கு பாராட்டும் வெகுமதியும். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 8 ஜூலை, 2021

திருடப்பட்ட குழந்தையை மீட்ட காவலர்களுக்கு பாராட்டும் வெகுமதியும்.


தருமபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 19.06.2021 மாலினி க/பெ அருள்மணி என்பவருக்குப் பிறந்த ஆண்குழந்தை 20.06.21 அன்று காணாமல் போனது. அது தொடர்பாக தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கலைச்செல்வன். ஐ,பி,எஸ்., அவர்களின் உத்தரவின் பேரில் தருமபுரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.அண்ணாதுரை அவர்களின் மேற்பார்வையில் தருமபுரி நகர காவல் நிலைய ஆய்வாளர் திரு.சரவணன் அவர்கள் விரைவாக செயல்பட்டு குழந்தையை கண்டுபிடித்து, குழந்தையை கடத்திச் சென்ற தஞ்சியா க/பெ ஜான் பாஷா, தஞ்சியாவின் கணவர் ஜான் பாஷா, தஞ்சியாவின் தாயார் ரேஷ்மா மற்றும் பாட்டி பேகம் பீர் ஆகிய நான்கு நபர்களையும் 22.06.2021 அன்று கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த குழந்தை கண்டுபிடிப்பு பணியில் தருமபுரி நகர காவல் நிலைய குற்ற எண் 780/2021 சட்டப்பிரிவு 365 இ.த.ச வழக்கினை உடனடியாக பதிவு செய்து துரிதமாக செயல்பட்டு குழந்தையை கண்டு பிடித்ததுடன் அதற்கு காரணமான நான்கு நபர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்த தருமபுரி நகர காவல் நிலைய ஆய்வாளர் திரு.சரவணன் உள்ளிட்ட காவல் துறையினரை மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் திரு.சுதாகர்.ஐ,பி,எஸ்., அவர்கள் பாராட்டி சான்றளித்து, வெகுமதி வழங்கி கௌரவித்தார். அப்போது சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.மகேஸ்வரி.ஐ.பி.எஸ்,. அவர்களும் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கலைச்செல்வன்.ஐ.பி.எஸ்., அவர்களும் உடன் இருந்தனர்.


இதனைத் தொடர்ந்து மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் அவர்களின் தலைமையில் தருமபுரி மாவட்ட தனிப்பிரிவு மற்றும் அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad