இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதல்; ஒருவர் பலி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 11 ஜூலை, 2021

இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதல்; ஒருவர் பலி.


மொரப்பூர் அருகே இன்று காலை சுமார் 7 மணி அளவில் மொரப்பூரிலிருந்து சிந்தல்பாடி செல்லும் வழியில் உள்ள பெருமாள் கோயில் அருகில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. சம்பவ இடத்தில் நிகழ்விடத்திலேயே ஒருவர் பலி. மற்றொருவர் பலத்த காயங்களுடன் அரூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டார். வேப்பிலைப்பட்டி சார்ந்த இளையராஜா என்பவர் மொரப்பூரில் உள்ள தனது மாமனார் வீட்டில் தங்கி பணியாற்றி வருகிறார்.

இன்று காலை இளையராஜா பெருமாள் கோயில் அருகில் வந்துக்கொண்டு  இருந்தபோது எதிரே வந்த ஓய்வு பெற்ற காவலர் ராஜா என்பாரின் இருசக்கர வாகனனும் இளையராஜாவின் இருசக்கர வாகனமும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில். சம்பவ இடத்திலேயே இளையராஜா அகால  மரணம் அடைந்தார். பலத்த காயங்களுடன் ராஜா அரூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டார் இதுகுறித்து மொரப்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விசாரணை நடத்தி வருகிறார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad