மீண்டும் வந்த பாம்பு; அடித்து கொன்ற மக்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 9 ஜூலை, 2021

மீண்டும் வந்த பாம்பு; அடித்து கொன்ற மக்கள்.


பாலக்கோடு அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மனைவி செல்வராணி. பெருமாள் தந்து வீட்டில் உரமூட்டைகளை வைத்து இருந்தனர். அதில் மூட்டைகளுக்கு இடையில் இருந்த பாம்பு ஒன்று செல்வராணியை கடித்தது. பாம்பு கடிதத்தில் அலறிய செல்வராணியின் சதகம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், அதற்குள் அந்த பாம்பு வீட்டுக்கு அருகில் உள்ள புதருக்குள் சென்று மறைந்தது விட்டது. பின்பு பாம்பு கடித்த செல்வராணியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராணி உயிரிழந்தார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்த பாலக்கோடு காவல்துறையினர் பெருமாள் வீட்டுக்கு சென்றனர். அங்கு காவலர்கள் விசாரணை செய்து கொண்டிருந்த போது செல்வராணியை கடித்த அதே பாம்பு மீண்டும் பெருமாள் வீட்டுக்கு வந்தது. பாம்பை பார்த்த அவர்கள் பரபரப்பாயினர், உடனே அந்த பாம்பை அங்கிருந்தவர்கள் அடித்துக் கொன்றனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. 

கருத்துகள் இல்லை:

Post Top Ad