கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் அடுத்த ஆத்தெரத்தான் கொட்டாய் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கிரானைட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று தொழிலாளர்கள் இயந்திரம் மூலம் கிரானைட் கற்களை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஜெயகிருஷ்ண ஜனா என்பவர் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது.
இதில் படுகாயமடைந்த அவரை, சக ஊழியர்கள் மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜெயகிருஷ்ண ஜனாவை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவேரிபட்டணம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக