பாமக சார்பில் மாவீரன் அழகுமுத்துக்கோன் வீரவணக்க நிகழ்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 11 ஜூலை, 2021

பாமக சார்பில் மாவீரன் அழகுமுத்துக்கோன் வீரவணக்க நிகழ்வு.


இன்று காலை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவீரன் அழகு முத்துகோன் அவர்களின் குருபூஜை வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது, இதில் பென்னாகரம் சட்ட மன்ற உறுப்பினரும், பாட்டாளி மக்கள் கட்சி தலைவருமான திரு. கோ.க. மணி அவர்கள் தலைமையில் அக்கட்சியினர் கலந்துகொண்டு மாவீரன் அழகு முத்துகோனின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செலுத்தபட்டது.


இதில் பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்த நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர் . மாவீரரான வீர அழகுமுத்துக்கோன் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதையும் வீரவணக்கம் செலுத்தியபோது. ஆங்கிலேயர்களை எதிர்த்தும், பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டுவதை தடுக்கவும் செய்தார், வீர அழகுமுத்துக்கோன். இதனால் கோபமுற்ற ஆங்கிலேய அரசு பிரிட்டிஷ் ஜெனரல் மருதநாயகம் பிள்ளை (முகம்மது யூசுப் கானை) அனுப்பி வைத்தது. வீர அழகுமுத்துக்கோனுக்கும், மருதநாயகம் பிள்ளைக்கும் (கான் சாஹிப்) பெத்தநாயக்கனூர் கோட்டையில் போர் நடந்தது. வீர அழகுமுத்துவின் வலது கால் சுடப்பட்டது. இருப்பினும் 3 மணி நேரம் போர் தொடர்ந்தது.


இறுதியில் வீர அழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களும் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடுக்காட்டூர் என்னும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். பீரங்கி முன் நிறுத்தப்பட்டு வரி செலுத்துமாறு வற்புறுத்தப்பட்டனர். மன்னிப்பு கேட்டால் உயிர் மிஞ்சும் என்று கேட்டும் வீர அழகுமுத்துக்கோன் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். பிறகு 248 வீரர்களின் வலது கரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. பீரங்கி முன் நின்ற வீர அழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகளும் மார்பில் சுடப்பட்டு வீர மரணம் அடைந்தனர். எட்டையாபுரம் சமஸ்தானத்தில் வேலை செய்த சுவாமி தீட்சிதர் என்பவரால் எழுதப்பட்ட வம்சமணி தீபிகை பீரங்கி முன் நின்று சாகும் தருவாயிலும் தன்னைச் சேர்ந்தவர்களை காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று கூறிய நெஞ்சுரம் மிக்கவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் கோ.க. மணி அவர்கள் பேசினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad