மத்தூர் அருகே உள்ள களர்பதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 38). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று அதேபகுதியை சேர்ந்த வேடியப்பன் (32), விஸ்வநாதன் (25) உள்ளிட்டோர் மலையாண்டஅள்ளி பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த அதேபகுதியை சேர்ந்த பசுபதி தரப்பினர் உதயகுமார், வேடியப்பன், விஸ்வநாதன் உள்ளிட்டோரை முன்விரோதம் காரணமாக தாக்கினார்கள். இதுகுறித்து உதயகுமார் மத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பசுபதியை கைது செய்தனர். மேலும் தலைமறைவான பரத் (21) என்பவரை தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக