மருத்துவர் வீட்டில் கொள்ளை; காவல்துறை விசாரணை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 7 ஜூலை, 2021

மருத்துவர் வீட்டில் கொள்ளை; காவல்துறை விசாரணை.


கிருஷ்ணகிரி சாந்திநகர் முதல்கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 39). மருத்துவர். இவருடைய மனைவியும் மருத்துவர். கடந்த 4-ந் தேதி ரமேஷ்குமார், குடும்பத்துடன் தனது சொந்த ஊரான அரூருக்கு சென்று விட்டு  நேற்று முன்தினம் அவர் வீடு திரும்பினார். 


அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்திருந்தது, இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ரமேஷ்குமார் அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த 2 பீரோக்கள் திறக்கப்பட்டு அதில் இருந்த 24¼ பவுன் தங்க நகைகள், ரூ.65 ஆயிரம் ரொக்க பணம் போன்றவை திருடப்பட்டிருந்தது.


வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் இரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து திருட்டி சென்றிருக்கலாம் இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து ரமேஷ்குமார் கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போல காவல் ஆய்வாளர் (பொறுப்பு) கணேஷ்குமார் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

தடயவியல் நிபுணர்களும் திருட்டு நடந்த வீட்டிற்கு சென்று தடயங்களை சேகரித்தனர். மருத்துவர் தம்பதி வீட்டுக்குள் புகுந்து நகைகள், பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை கிருஷ்ணகிரி நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad