தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பென்னாகரம் பஸ் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க பகுதி குழு தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார்.
இதில் மாவட்ட செயலாளர் அர்ஜூனன், மாவட்ட துணை தலைவர் அன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள் முருகேசன், ரவி, பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட நிர்வாகி ஜீவானந்தம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி பொறுப்பாளர் கருப்பண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மார்கண்டேய என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டி உள்ளது. இதனால் 4 மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
எனவே இந்த திட்டத்தை கர்நாடக அரசு உடனே கைவிட வேண்டும். இதுதொடர்பாக உடனே நடுவர் மன்றம் அமைக்க வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக