இளைஞர்கள் அமைத்துக்கொடுத்த கர்ப்பிணிகள் ஓய்வு கூடம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 11 ஜூலை, 2021

இளைஞர்கள் அமைத்துக்கொடுத்த கர்ப்பிணிகள் ஓய்வு கூடம்.


கடகத்தூரை அடுத்த புலிக்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் கர்ப்பிணி பெண்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர், அவர்கள் ஓய்வு எடுக்க போதிய இடவசதி மருத்துவ மனையில் இல்லாததால் பல கர்ப்பிணிகள் வெயிலிலும், மழையிலும் காத்திருந்து மருத்துவம் பார்த்து செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.

மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள், பணிபுரியும் பணியலாளர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் புலிகரை இளைஞர்களின் சார்பாக ரூபாய் 1.25 லட்சம் நன்கொடை வசூல் செய்யப்பட்டு, நண்பர்கள் குழுவின் தலைவர் ரமேஷ் மற்றும் ராஜா மற்றும் சந்திரன் ஆகியோரின் தலைமையில் இந்த கர்ப்பிணிகள் ஓய்வு கூடம் கட்டப்பட்டு, இன்று முதல் கர்ப்பிணிகள் பயன்படுத்த பயன்பாட்டுக்கு வந்தது. இளைஞர்களின் இந்த செயலை மருத்துவமனைக்கு வந்த கர்ப்பிணிகளும், பொதுமக்களும் பாராட்டினார்கள். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad