மேனாள் குடியரசு தலைவர், அணு விஞ்ஞானி, மேதகு.APJ.அப்துல் கலாம் அய்யா அவர்களின் 06ஆம் ஆண்டு நினைவு நாளினையொட்டி தகடூர் தருமபுரி இளைஞர் சங்கமம் சார்பில் தருமபுரி மாதர் சங்கத்தில் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.
தருமபுரி மாதர் சங்க முதியோர் இல்லத்தில் உள்ள 25 பாட்டிகளுக்கு இளைஞர் சங்கமம் சார்பில் சிற்றுண்டி மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டு நினைவுநாள் கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் இளைஞர் சங்கமத்தின் நிறுவன தலைவர் தகடூர் பிறைசூடன், கௌரவ தலைவர் ஏலகிரி குணசேகரன் மற்றும் செயலர் தகடூர் சந்துரு ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக