ஒலிம்பிக்கில் விளையாட போகும் தருமபுரி வீரர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 9 ஜூலை, 2021

ஒலிம்பிக்கில் விளையாட போகும் தருமபுரி வீரர்.


நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக்கில் பாலக்கோடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் செல்வராஜ். பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்றவர். இவர் வருகின்ற 2024. ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய ஹாக்கி ஆண்கள் அணியில் பங்கேற்று விளையாடுவதற்கான பயிற்சி முகாமிற்கு தேர்வு பெற்றுள்ளார்.

இதற்கான பயிற்சி மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கபட உள்ளது. ஒலிம்பிக் போட்டிக்கான தேசிய ஹாக்கி பயிற்சி அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள செல்வராஜிக்கு கல்விதுறை சார்பில், தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா பரிசு வழங்கி பாராட்டினார்.


செல்வராஜ் ஒலிம்பிக் போட்டியில் விளையாடி  வென்று தருமபுரிக்கு பெருமை தேடி தரவேண்டும் என்பதே மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு. 

கருத்துகள் இல்லை:

Post Top Ad