மொரப்பூர் அடுத்த தாசிரஹள்ளியில் நடிகர் தளபதி விஜய் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு மொரப்பூர் ஒன்றிய மாணவரணி தலைமை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு உடை,உணவு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
நிகழ்ச்சியை தருமபுரி மாவட்ட மாணவரணி தலைவர் திரு. எஸ். தினேஷ் ராஜா, செயலாளர் செல்லதுரை கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மொரப்பூர் ஒன்றிய மாணவரணி தலைவர் வி.க. சுதர்சனம் ஜோ ஏற்பாடு செய்திருந்தார் உடன் மொரப்பூர் ஒன்றிய மாணவரணி நிர்வாகிகள் சதீஷ், சக்திவேல், மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒன்றிய தலைவர் மேகநாதன் தலைமை தாங்கினார், இந்த நிகழ்ச்சியில் அனைத்து அணி தலைவர்களும் அணி நிர்வாகிகளும் மாணவரணி தலைமை உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக