இதனால் விவசாயிகள் பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, விதைப்பதற்கு முன்பு விதைகளின் தரத்தை பரிசோதனை செய்வது அவசியம். ஆதன்மூலம், இடுபொருட்கள் செலவு குறையும். மகசூல் அதிகரிக்கும்.
குறைந்த அளவில் அதிக மகசூல் பெற விதைப்பரிசோதனை செய்தபின் விதைகளை பயன்படுத்துவது அவசியம். அப்போதுதான், விதைகளின் முளைப்புத்திறன் குறைபாடு இல்லாமல் இருக்கும். விதைகளில் பிற ரக விதைகள் உள்ளதா என்பதையும் அறியலாம்.
கலப்பு விதைகள் பயன்படுத்துவதை தவிர்க்கலாம். மேலும், விதையின்
ஈரப்பதம் மற்றும் சுத்தத்தன்மை ஆகியவற்றை அறிந்து பயன்படுத்துவதின் மூலம், விதைகள் முளைக்க தரமானதா என்பதை தெரிந்துகொள்ளலாம்.
தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு விதைப்பரிசோதனை நிலையத்தில் விவசாய பெருமக்கள் தங்களிடம் உள்ள விதைகளை அனுப்பி, அவற்றின் ஈரப்பதம், முளைப்புத்திறன், புறத்தூய்மை மற்றும் பூச்சி நோய் தாக்குதல் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.
தருமபுரி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் விதைப் பரிசோதனை
ஆய்வகமானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் இயங்கி வருகிறது. விதை மாதிரிகளை நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்பி வைக்கலாம். விதைகளை அனுப்பும்போது பயிரின் பெயர், ரகம், குவியல் எண் மற்றும் தேவைப்படும் பரிசோதனை ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.
ஒரு மாதிரிக்கு ரூ.30/- வீதம் விதைப்பரிசோதனை கட்டணம் சேர்த்து அனுப்ப வேண்டும். இவ்வாறு தருமபுரி, விதைப்பரிசோதனை அலுவலர் திரு.டி.ரவி அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக