கெலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் தசரத்குமார் (வயது 22). கட்டிட தொழிலாளி. ஓசூர் சிப்காட் பகுதியில் பேகேபள்ளியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது.
கடந்த மே மாதம் 24-ந் தேதி தசரத்குமாரின் மனைவி கொரோனாவிற்கு பலியானார். அன்றிலிருந்து மனைவியின் நினைவோடு இருந்த தசரத்குமார், இதனால் சரியாக வேலைக்கு செல்லாமல் விரக்தியுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டின் அருகே உள்ள மாட்டு கொட்டகையில் தசரத்குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மறுநாள் காலை அங்கு சென்ற தசரத்குமாரின் தந்தை வெங்கடேசன் மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதார்.
அவரது அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு சென்று பார்த்தனர். இந்த தகவல் அறிந்த ஓசூர் சிப்காட் காவலர்கள் சம்பவ இடம் சென்று, தசரத்குமாரின் உடலை மீட்டு பிரே பரிசோதனைக்கு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக