அரூர் - சேலம் பைபாஸ் ரோட்டில் வாரந்தோறும் செயல்படும் பழமை வாய்ந்த மிகப் பெரிய வாரச்சந்தை கோபிநாதம்பட்டி கூட்டு ரோடு பகுதியில் புதன் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையில் ஆடு, மாடு விற்பனை மற்றும் காய்கறிகள், விவசாய தளவாட கருவிகள் விற்கப்படுகின்றன.
இந்த சந்தையில் தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், திருவண்ணாமலை உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கோழி, ஆடு, மாடுகளை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். இந்த சந்தையிலிருந்து வாங்கப்படும் மாடுகள் கேரளா மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆடி மாதத்தில் ஆடு மாடுகள் அதிக அளவில் விற்பனை கொண்டு வரப்படும்.
கடந்த ஓராண்டுக்கு மேலாக கோரோனா தொற்று பரவல் காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் இந்த வார சந்தை மூடப்பட்டது. தற்பொழுது படிப்படியாக கொரோனா வைரஸ் தொற்று குறைய தொடங்கியது. இதனால் அரசு சில தளர்வுகள் அறிவித்தது. தற்பொழுது இரண்டு வாரங்களாக புதன் சந்தை செயல்பட தொடங்கியுள்ளது. ஆடி மாதத்தில் 1 முதல் 18ஆம் தேதி வரை ஏராளமான ஆடு மாடுகள் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெற்று வந்தது. தற்பொழுது ஆடி 18க்கு ஒரு வார காலமே உள்ள நிலையில் இன்று நடைபெற்ற புதன் சந்தையில் குறைவான மாடு, கோழி, ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. கோடிக்கணக்கில் விற்பனையான இந்த சந்தையில் தற்பொழுது லட்சத்தில் மட்டுமே விற்பனை நடைபெற்றது. ஆடி மாதத்தில் சில கோயில்களில் ஆடு, கோழிகளை பக்தர்கள் சாமிக்கு காணிக்கை செலுத்தி அதை வெட்டி பொதுமக்களுக்கு உணவு பரிமாறுவார்கள். கொரோனா பரவலை தடுக்க இதுபோன்ற ஆலயங்களுக்கு பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்படலாம் என்ற சந்தேகத்தில் பலர் ஆடுகளை வாங்க தயக்கம் காட்டுவதால் சந்தையில் ஆடுகள் வரத்துக் குறைவு விற்பனை மந்தம் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக