மாற்று திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 28 ஜூலை, 2021

மாற்று திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்.

மொரப்பூர் ஊராட்சி அண்ணல் நகர்  ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கொரோணா தடுப்பூசி முகாம் இன்று 28.7.2021 காலை 10 மணி முதல் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி உமா ராணி உலகநாதன் தலைமையில்  முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது. இதில் தருமபுரி மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் மாற்று திறனாளிகளுக்கு உபகரணங்களும், கொரோணா தடுப்பூசியும் போடப்பட்டது. 

உடன் மொரப்பூர் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் சுகாதார அலுவலர் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜிலான் அவர்களும் கலந்து கொண்டனர்.இதில் ஏராளமான பொதுமக்கள் வந்து பயன்பெற்றனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad