தர்மபுரி மாவட்டத்தில் ஒவ்வொரு வியாழன் தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் முகாம்கள் மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது அதன் தொடர்ச்சியாக இன்று பாலக்கோடு காவல் நிலையம் அருகில் உள்ள தடுப்பூசி முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி முகாம் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது.
இந்த முகாமில் பல மாற்றுத்திறனாளிகள் பங்குபெற்று கொரோனா தடுப்பு ஊசிகளை ஆர்வத்துடன் செலுத்தி கொண்டனர் முகாமில் பென்னாகரம் பிரண்ட்லைன் யூத் ரைஸ் கிளப்(FYRC) சார்பாக தன்னார்வல தொண்டர்களாக பங்குபெற்ற அனைவருக்கும் மாஸ்க் ,டீ, பிஸ்கட் மற்றும் தண்ணீர் போன்ற உபகரணங்களை வழங்கி சிறப்பித்தனர் இந்த நிகழ்வில் FYRC கிளப்பில் இருந்து முகமத் அப்சர், ஆரிப், முதசிர், உமர் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக