தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில் உலக நன்மைக்காக 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு பல்வேறு திரவியங்கள், பழங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்றன.
பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் சாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ஜீவானந்தம், கோவில் அர்ச்சகர் கிருபாகரன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக