தொன் போஸ்கோ கல்லூரியில் 11ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 2 ஏப்ரல், 2022

தொன் போஸ்கோ கல்லூரியில் 11ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா.

தருமபுரி, தொன் போஸ்கோ கல்லூரியில் 02.04.2022 அன்று 11ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் 2017-2020 மற்றும் 2018-2021 ஆகிய கல்வியாண்டுகளில் இளங்கலையிலும், 2018 -2020 மற்றும் 2019-2021ஆம் கல்வியாண்டுகளில் முதுகலையிலும் தேர்ச்சிப் பெற்ற மாணாக்கர் பட்டம் பெற்றனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவிற்குக் கல்லூரியின் செயலர் அருட்திரு முனைவர் எட்வின் ஜார்ஜ் ச.ச. தலைமை வகித்தார். 

விழாவில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் இரா. ஜெகநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியதோடு, தங்கப்பதக்கம், தரவரிசைப்பட்டியலில் இடம்பெற்றோர் மற்றும் பிற மாணாக்கர் அடங்கிய 1100 பேருக்குப் பட்டங்களை வழங்கி சிறப்புச் செய்தார். 

தொடர்ந்து அவர் பேசுகையில், இந்நிகழ்வில் பட்டம் பெற்றிருக்கிற மாணவ, மாணவியர் பட்டம் பெற்றதோடு, தாம் பெற்றக் கல்வியைக் கொண்டு சமூகம் பயன்பெறும் அளவில் பணிகளைச் செய்ய வேண்டுமென்றும், அதற்கேற்றவாறு தம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் கூறினார். கல்லூரியின் முதல்வர் அருட்திரு முனைவர் ஆ. சிலுவைமுத்து ச.ச. அவர்கள் உறுதிமொழி வாசிக்க, பட்டம் பெற்ற மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். 

இவ்விழா நாட்டுப் பண்ணுடன் இனிதே நிறைவுப் பெற்றது. நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவினைக் கணிதத்துறைத் தலைவர் கி. ஜெய்சங்கர் அவர்களின் பொறுப்பில் துறைப் பேராசிரியர்கள் இணைந்து சிறப்பாகச் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad