நல்லம்பள்ளி அருகே ரூ.4½ லட்சம் மதிப்புள்ள குட்கா மூட்டைகள் பதுக்கியவர் கைது செய்யப்பட்டார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 1 ஏப்ரல், 2022

நல்லம்பள்ளி அருகே ரூ.4½ லட்சம் மதிப்புள்ள குட்கா மூட்டைகள் பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.

நல்லம்பள்ளி அருகே ரூ.4½ லட்சம் மதிப்புள்ள குட்கா மூட்டைகள் பதுக்கியவர் கைது செய்யப்பட்டார். இவர், மோட்டார் சைக்கிளில் கடைகளுக்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே தடங்கம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் பகுதியில் அதியமான்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது காரிமங்கலம் பகுதியில் இருந்து அதியமான்கோட்டை நோக்கி மூட்டைகளுடன் வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் காரிமங்கலத்தை அடுத்த காளப்பனஅள்ளி கிராமத்தை சேர்ந்த சேகர் (வயது 41) என்பதும், அவர், மோட்டார் சைக்கிளில் குட்கா பொருட்களை மூட்டை, மூட்டையாக கொண்டு வந்ததும் தெரிய வந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்ததுடன் மேல் விசாரணை நடத்தினர்.

வீட்டில் பதுக்கியது அம்பலம்

அப்போது சேகர், குட்கா பாக்கெட்டுகளை மூட்டை, மூட்டையாக வாங்கி வீட்டில் பதுக்கி வைத்துள்ளார். மேலும் அந்த மூட்டைகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்று கிராமப்புறங்களில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உடனே போலீசார் சேகர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 20 மூட்டைகளில் 600 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மதிப்பு ரூ.4½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. 

கருத்துகள் இல்லை:

Post Top Ad