மேற்படி தீர்ப்புரையின் படியும், தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவின் பேரிலும், பச்சை கவுண்டன் குட்டையை 14.02.2022 அன்று காலை சுமார் 11.00 மணியளவில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் தலைமையில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர், பாப்பிரெட்டிப்பட்டி மண்டல துணை வட்டாட்சியர், வட்ட துணை ஆய்வாளர், வட்ட சார் ஆய்வாளர் , உள் வட்ட அளவர், வருவாய் ஆய்வாளர், எச்.புதுப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர்களுடன் நில அளவீடு செய்யப்பட்டது.
நில அளவீட்டின்படி 44 நபர்கள் குடியிருப்புகள் அமைத்தும், ஒருவர் விவசாய சாகுபடி செய்தும் ஆக மொத்தம் 45 பேர் ஆக்கிரமிப்பு செய்துள்ளது கண்டறியப்பட்டன.எனவே மேற்படி ஆக்கிரமிப்புதார்களுக்கு தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905ன் படி 7-ம் எண் நோட்டீஸ் 18.02.2022 அன்று வழங்கப்பட்டும் ஆக்கிரமிப்புதாரர்கள் ஆக்கிரமிப்பு அகற்றப்படாத காரணத்தினால் 6-ம் எண் நோட்டீஸ் 04.03.2022 ல் வழங்கப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்புதார்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் ஆக்கிரமிப்பு அகற்றிக்கொள்ளப்படவில்லை எனவே மேற்படி ஆக்கிரமிப்புகளை 30.03.2022 அன்று காலை 10.00 மணியளவில் தருமபுரி மாவட்ட ஆட்சித்லைவர் அவர்களின் உத்தரவின் பேரில், அரூர் வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் தலைமையில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர், பாப்பிரெட்டிப்பட்டி மண்டல துணை வட்டாட்சியர். அ.பள்ளிப்பட்டி காவல் ஆய்வாளர் , வட்ட துணை ஆய்வாளர், வட்ட சார் ஆய்வாளர், உள்வட்ட அளவர், பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் ஆய்வாளர் எச்.புதுப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர்களுடன் பச்சை கவுண்டன் குட்டையில் இருந்த குடியிருப்புகள் மற்றும் விவசாய சாகுபடி ஆக்கிரமிப்பு முழுவதும் அகற்றம் செய்யப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக