தொப்பூர் கணவாயில் லாரிகள் மோதல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 1 ஏப்ரல், 2022

தொப்பூர் கணவாயில் லாரிகள் மோதல்.

தொப்பூர் கணவாயில் லாரிகள் மோதிக்கொண்டன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

லாரிகள் மோதல்.

கர்நாடக மாநிலத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு டேங்கர் லாரி ஒன்று வந்தது. தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று அதிகாலை வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பின்பக்கமாக மோதியது. இதில் 2 லாரிகளும் ரோட்டில் கவிழ்ந்தன.

இந்த விபத்தில் 2 லாரி டிரைவர்களும் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் சுங்கச்சாவடி போலீசார் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு.

விபத்தில் சிக்கி காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீசார் விபத்தில் சிக்கிய லாரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad