தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் திருச்சி மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு பயின்று வரும் மாணவியர்கள் மதுமிதா, நர்மதா, மௌனிகா, காவியா, கீர்த்தனா, கௌசல்யா ஆகியோர் ஊரக தோட்டக்கலை பணி அனுபவத்திற்காக இரண்டு மாதம் பயிற்சி பெற வந்துள்ளனர்.
பயிற்சியின் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டியில் உள்ள விவசாயிகளுக்கு உழவன் செயலி குறித்து விளக்கம் அளித்தனர்.
இதில் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்யும் முறை, பதிவு செய்யும் முறை மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றி விரிவாக விளக்கினர்.
இதில் உழவன் செயலியின் பயன்களான மானியத் திட்டங்கள், இடுபொருள் முன் பதிவு, பயிர் காப்பீடு விவரம், உரங்கள் இருப்பு நிலை, விதை இருப்பு நிலை, வேளாண் இயந்திரம் வாடகை மையம், சந்தை விலை நிலவரம், வானிலை முன்னறிவிப்பு, உதவி வேளாண் அதிகாரி ஆகியவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என விவசாயிகளுக்கு மாணவிகள் கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக