தர்மபுரி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் அலுவலகத்தில் தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் மாவட்ட அளவிலான கூட்டம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு அலுவலகத்தின் முதன்மை பொறியாளர் முனைவர் சாமுவேல்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்க்கை தத்துவத்தையும் இயற்கை வளங்களின் தத்துவத்தையும் சுற்றுச்சூழல் பேணி காப்பது பற்றியும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு வழங்கி உரையாற்றினார்.
பின்னர் சிறப்பாக சமூக சேவை செய்தமைக்கு அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி உடற்கல்வி ஆசிரியர் பழனிதுரைக்கு அன்னை தெரசா விருது மற்றும் சான்றிதழ் வழங்கினார்
முடிவில் அருர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேலு நன்றி கூறினார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக