யுகாதி விடுமுறை ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

யுகாதி விடுமுறை ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

யுகாதி மற்றும் ஞாயிறு விடுமுறையை ஒட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் குளித்தும் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். மேலும் ஒகேனக்கல் தமிழகத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதால் அருகிலுள்ள மாவட்டங்களில் தெலுங்கு கன்னடம் தமிழ் பேசும் மக்கள் வசித்து வருகின்றனர். யுகாதி பண்டிகை அதிக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் விடுமுறையை ஒட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினி பால்ஸ், காவிரி ஆற்றில் முதலைப்பண்ணை உள்ளிட்ட இடங்களில் குளித்தனர். 

பின்னர் அவர்கள் குடும்பத்தினர் மற்றும்  நண்பர்களுடன் பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் தொங்கு பாலத்தில் நின்றவாறு அருவியின் அழகை கண்டு ரசித்தனர். முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா, உள்ளிட்ட பகுதிகளைச் சுற்றிப் பார்த்தனர்.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடைகளில் உணவகங்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நீர்நிலைகள் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காணப்பட்டது மெயினருவி மற்றும் காவிரி ஆற்றில் ஆங்காங்கே குளித்து மகிழ்ந்தனர்.  

சுற்றுலா பயணிகள் அதிகரித்ததால் போலீசார் ஆலம்பாடி ,மணல்திட்டு மெயின் அருவி, பரிசில் துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad