மாரண்டஹள்ளியில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார்
தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி ஒன்றிய நகர கழக அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் செந்தில் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் உயர்கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
கோடை வெயில் தாக்கத்தில் இருந்து பொது மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் தர்பூசணி, இளநீர், நீர்மோர் , வெள்ளரி உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கோபால்,மாவட்ட அவைத்தலைவர் தொமு. நாகராசன், வேலூர் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில மண்டல பொறுப்பாளர் ஜனனி சதீஷ்குமார், மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி, இணைச் செயலாளர் அண்ணாமலை, நகர செயலாளர் பழனிவேல் மற்றும் 200க்கும் மேற்பட்ட அதிமுக கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக