அரூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 15 லட்சம் மதிப்பீட்டில் இராஜக்கால்வாயினை புனரமைக்கும் பணி பூமி பூஜை செய்து எம்எல்ஏ சம்பத்குமார் தொடங்கி வைத்தார்.
தருமபுரி மாவட்டம் அரூர் இராஜக்கால்வாயினை புனரமைக்க சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15லட்சம் மதிப்பீட்டில் இன்று ராஜ கால்வாயினை புனரமைப்பு செய்து தரைத்தளம் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியினை அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்சியில் அரூர் ஒன்றிய செயலாளர் ஆர் ஆர் பசுபதி ஊராட்சி மன்ற தலைவி பொன்மலர் பசுபதி, அரூர் நகர செயலாளர் ஏஆர்எஸ்எஸ் பாபு, பேரூராட்சி துணைத் தலைவர் சூரிய தனபால் அரசு அதிகாரிகள் அரசியல் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக