தமிழகத்தின் பாரம்பரியம் மிக்க கலைகளை பயிலுவதற்கு தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த சிறுவர்கள், சிறுமியர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப.., அவர்கள் தகவல்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது:- தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை கீழ் அரசு இசைக்கல்லூரிகள் ஓவியம் மற்றும் சிற்பம் கல்லூரிகள் 17 மாவட்டங்களில் அரசு இசைப்பள்ளிகள் என இசை, நடனம் ஓவியம், சிற்பம் ஆகிய கலைப்பிரிவுகளில் முழுநேர சான்றிதழ் பட்டயம்/பட்டம் அளிக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி செல்லும் மாணவ மாணவியர் கலைகளை பயிலும் வண்ணம் பகுதி நேரமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவகர் சிறுவர் மன்றங்கள் மூலமாக கட்டணமில்லா கலைப்பயிற்சியினை அளித்து வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் ஜவகர் சிறுவர் மன்றம் இயங்கி வருகின்றது.
தருமபுரி மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றத்தின் குரலிசை (வாய்பாடு) பரதநாட்டியம், ஓவியம், சிலம்பம் ஆகிய கலைகளில் சனிக்கிழமை மாலை 4.00 முதல் 6.00 மணி வரையிலும் ஞாயிறு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரையிலும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றது. இம்மன்றத்தின் பயிற்சி வகுப்புகள் தருமபுரி அப்பாவு நகர், (எம்.ஜி.ஆர் நகர் செல்லும் வழி) அரசு நகராட்சி துவக்கப்பள்ளியில் வருகின்ற 09.07.2022 சனிக்கிழமை அன்று மாலை 04.00 மணிக்கு தொடங்குகிறது. 5 வயது முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்கள், சிறுமியர்கள் இப்பயிற்சியில் சேரலாம்.
இப்பயிற்சிக்கு கட்டணம் இல்லை. சிறுவர் மன்ற உறுப்பினராக பதிவு செய்வதற்கு ஆண்டு சந்தாவாக ரூ.300 செலுத்தப்படவேண்டும். இம்மன்றத்தில் உறுப்பினராகி பயிற்சி பெறும் சிறுவர்கள், சிறுமியர்கள் மாவட்ட, மாநில தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கவும், கருத்தரங்கம், செயல்முறை, பயிலரங்கம் ஆகியவைகளில் கலந்துக் கொள்ளவும் வாய்ப்பளிக்கப்படும் முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் விபரம் வேண்டுவோர் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றத்தின் திட்ட அலுவலரை 9486523986 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் தமிழகத்தின் பாரம்பரியம் மிக்க கலைகளை பயிலுவதற்கு உரிய வாய்ப்பினை தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவர்கள், சிறுமியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக