தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தேர்வுநிலை பேரூராட்சியில் எர்ரகொல்லனூர் முதல் எட்டயாம்பட்டி வரை நபார்டு நிதிஉதவியுடன் ரூபாய் 69 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணி பூமி பூஜை பேரூராட்சி தலைவர் எம்.வீரமணி தலைமையில், செயல் அலுவலர் சு.கீதா முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் வள்ளியம்மாள் பவுன்ராஜ், பேரூராட்சி கவுன்சிலர்கள் நிரோஷா முரளி, சுமித்ரா சந்தோஷ், சுமதி வெங்கடேஷ், ஜெயக்கொடி பச்சையப்பன், மோசின் கான், பவுன்ராஜ், ரேவதி லட்சுமணன், ஜெயந்தி குணாளன், ஷானு, கமலேசன், பூவரசன் மற்றும் திமுக மாவட்ட பிரதி சிவக்குமார், ஒப்பந்ததாரர் ஜெமினி &கோ பிரபு, கிளை செயலாளர் நட்ராஜ், கிருஷ்ணன், இன்பசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக