உலக போதை நோய் ஒழிப்பு நோய் தினத்தை முன்னிட்டு போதை நோய் விழிப்புணர்வு பேரணி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 1 ஜூலை, 2022

உலக போதை நோய் ஒழிப்பு நோய் தினத்தை முன்னிட்டு போதை நோய் விழிப்புணர்வு பேரணி.

தருமபுரி மாவட்டம் அரூர் புனித மரியண்ணை மேல்நிலைப்பள்ளி சார்பில் உலக போதை நோய் ஒழிப்பு நோய் தினத்தை முன்னிட்டு போதை நோய் விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த பேரணி  அரூர் கச்சேரி மேட்டிலிருந்து பேருந்து நிலையம் வரை பள்ளி மாணவ, மாணவிகள் மது ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியும் கோஷங்களை  எழுப்பியும்  பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர், பேரூராட்சி துணை தலைவர் மற்றும் பள்ளியின் ஆசிரியர் ஆசிரியைகள்  பள்ளி மாணவ மாணவிகள் என உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad