இந்நிகழ்ச்சியில் அவர் மீன்வளத்துறை மானிய திட்டங்கள் மற்றும் கிப்ட் திலேப்பியா பயோ பிளாக் முறையில் மீன்வளர்ப்பு தொழில்நுட்பங்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்கள் மேலும் பயோ பிளாக் முறையில் மீன்வளர்ப்பு அனுபவத்தை திரு சுரேஷ்குமார் மற்றும் திரு மரிய ஞானம் அவர்கள் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலர் திரு ஜெயக்குமார் அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வேளாண்மை துறை மானிய திட்டங்கள் பற்றியும் இலவச மரகன்றுகள் வழங்கும் திட்டங்கள் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் வட்டார தொழில் நுட்ப மேலாளர் திரு செந்தில் குமார் அவர்கள் கலந்து கொண்டு அட்மா திட்ட செயல் பாடுகள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்கள்.
இறுதியில் உதவி தொழில் நுட்ப மேலாளர் திரு சண்முகம் அவர்கள் விவசாயிகளுக்கு நன்றியுரை கூறினார்கள் மேலும் இந்நிகழ்ச்சியில் 40 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக