தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தலைமையில் இன்று (04.07.2022) நடைபெற்றது, இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் பேருந்து வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், ஆக்கரமிப்புகள் அகற்றுதல், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா, புதிய வீடு, புதிய மின் இணைப்பு வசதி, முதியோர் ஓய்வூதியத் தொகை, இதர உதவித் தொகைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 422 மனுக்கள் வரப்பெற்றன.
ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பெற்றுகொண்ட அம்மனுக்களை வழங்கி, அம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மாவட்ட இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தருமபுரி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கிடையே நடத்தப்பட்ட பேச்சுப்போட்டிகளில், வெற்றி பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற போளையம்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவன் செல்வன்.சி.அரிசாந்த் அவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000/-த்திற்க்கான காசோலை மற்றும் சான்றிதழையும், இரண்டாமிடம் பெற்ற தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி செல்வி.செ.ஹேமலதா அவர்களுக்கு இரண்டாம் பரிசாக ரூ.3,000/-த்திற்க்கான காசோலை மற்றும் சான்றிதழையும், மூன்றாமிடம் பெற்ற போளையம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவி செல்வி.சி.சௌமியா அவர்களுக்கு மூன்றாம் பரிசாக ரூ.2,000/-த்திற்க்கான காசோலை மற்றும் சான்றிதழையும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பரிசு பிரிவில் எம்.தொட்டம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினோறாம் வகுப்பில் பயிலும் மாணவி செல்வி.கு.அர்ச்சனா அவர்களுக்கு மற்றும் பேகாரஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் பயிலும் மாணவி செல்வி.மா.திலகா ஆகிய இருவருக்கும் சிறப்பு பரிசாக தலா ரூ.2,000/- வீதம் ரூ.4,000/- த்திற்க்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்களையும், மேலும் கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே நடத்தப்பட்ட பேச்சுப்போட்டிகளில், வெற்றி பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற காரிமங்கலம், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலைத்தமிழ் மூன்றாமாண்டு பயிலும் மாணவி செல்வி.மு.பவித்ரா அவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000/-த்திற்க்கான காசோலை மற்றும் சான்றிதழையும், இரண்டாமிடம் பெற்ற தருமபுரி, அரசு கலைக்கல்லூரியில் இளம் அறிவியல் கணிதம் முதலாமாண்டு பயிலும் மாணவி செல்வி.க.தீபிகா அவர்களுக்கு இரண்டாம் பரிசாக ரூ.3,000/-த்திற்க்கான காசோலை மற்றும் சான்றிதழையும், மூன்றாமிடம் பெற்ற தருமபுரி, அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி, நுண்கதிர்வீச்சு பிரிவு, இரண்டாமாண்டு மாணவி செல்வி.சு.திலகவதி அவர்களுக்கு மூன்றாம் பரிசாக ரூ.2,000/-த்திற்க்கான காசோலை மற்றும் சான்றிதழையும் வழங்கினார்கள்.
இதனை தொடர்ந்து, முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்தநாளையொட்டி தருமபுரி மாவட்டத்தில் கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே நடத்தப்பட்ட பேச்சுப்போட்டிகளில், வெற்றி பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற தருமபுரி அரசு கலைக்கல்லூரி, இளங்கலைத்தமிழ் மூன்றாமாண்டு மாணவன் செல்வன்.க.கவின் அவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000/-த்திற்க்கான காசோலை மற்றும் சான்றிதழையும், இரண்டாமிடம் பெற்ற காரிமங்கலம், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இளமறிவியல் வேதியல், முதலாமாண்டு மாணவி செல்வி.கோ.வைதேகி அவர்களுக்கு இரண்டாம் பரிசாக ரூ.3,000/-த்திற்க்கான காசோலை மற்றும் சான்றிதழையும்,, மூன்றாமிடம் பெற்ற பென்னாகரம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளமறிவியல் கணிதவியல் முதலாமாண்டு மாணவி செல்வி.மு.கலையரசி அவர்களுக்கு மூன்றாம் பரிசாக ரூ.2,000/- த்திற்க்கான காசோலை மற்றும் சான்றிதழையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் வழங்கினார்கள்.
மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்திற்கு ஆக்கமும் திறமையும் காட்டும் அரசுப் பணியாளர்களுக்குப் பரிசு வழங்கும் திட்டத்தின்கீழ் 2020ஆம் ஆண்டில் தமிழில் சிறந்த குறிப்புகள் வரைவுகள் எழுதியமைக்காக தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட பட்டுவளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தின் இளநிலை உதவியாளர் திருமதி.சி.ரோஜா அவர்களுக்கு ரூ.3,000/- த்திற்க்கான காசோலை மற்றும் சான்றிதழையும் வழங்கினார்கள்.
இன்று நடைபெற்ற இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே நடந்த பேச்சுப்போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 11 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.40,000/-த்திற்க்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்கள், தமிழில் சிறந்த குறிப்புகள் வரைவுகள் எழுதியமைக்காக இளநிலை உதவியாளருக்கு ரூ.3,000/- த்திற்க்கான காசோலை மற்றும் சான்றிதழ் என 12 மாணவர்கள், மாணவியர்கள், பணியாளருக்கு மொத்தம் ரூ.43,000/- த்திற்க்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினார்கள்.
இதனை தொடர்ந்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்க
தரைதளத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை இன்று பெற்றுக்கொண்டார்கள். இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, திட்ட இயக்குநர் (பொ), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை / திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திரு.பாபு, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத்திட்டம் திருமதி.வி.கே.சாந்தி, உதவி ஆணையர் (கலால்) திரு.தணிகாசலம், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் திருமதி தே.ஜெயஜோதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக