இப்பயிற்சியில் இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி உங்கள் கிராமங்களில் தார் சாலை அமைத்தல் மற்றும் பாலம் கட்டுதல் போன்ற பணி நடைபெறும் போது முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியவர்கள் ஆய்வு செய்வதற்கு இணையாக, இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும் ஆய்வு செய்ய முடியும் என்பதையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு எழுதுவது பற்றிய விளக்கமும் மிக எளிமையான முறையில் பயிற்சி அளித்தார்.
பயிற்சி முடியும் நிலையில் வருகின்ற 18/07/2022 அன்று தமிழ்நாடு தகவல் ஆணைய சீரமைப்பு குழு மூலம் சென்னை எழும்பூர் R.R ஸ்டேடியம் அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் எப்படி பங்கேற்பது என்பதை பற்றி வருகின்ற 06/07/2022- ஆம் தேதி புதன்கிழமை மதியம் 2.00.PM மணி அளவில் தருமபுரி மாவட்ட பத்து ரூபாய் இயக்கத்தின் அலுவலகத்தில் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் நல்வினை விஸ்வராஜு வழக்கறிஞர் ஐயா அவர்கள் விளக்கம் அளிக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில, மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி, பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
எனவே இக்கூட்டத்தில் பிக்கிலி ஊராட்சியை சேர்ந்த முத்து, ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் பத்திரிக்கையாளர் முனுசாமி, ஒன்றிய செயலாளர் தர்மசாஸ்தா, ஒன்றிய இணை ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், பி.செட்டி அள்ளி ஊராட்சி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ராசன், தேவன், பழனி சாமிநாதன், அம்பிகா போன்ற பத்து ரூபாய் இயக்கத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக