தருமபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளை அழைத்து செல்லும் பள்ளி வாகனங்கள் பாதுகாப்பாக உள்ளதா என இன்று வட்டார போக்குவரத்து அலுவலக மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் சாந்தி ஆய்வு செய்தார்.
இதில் தருமபுரியிலிருந்து 432 பேருந்துகளும், பாலக்கோட்டிலிருந்து 310 பேருந்துகள் என மொத்தம் 742 பேருந்துகளில் அவசர வழி, ஜனன்னல், மருந்துப்பெட்டி, படிக்கட்டு தரம் உள்ளிட்டவை குறித்து பாதுகாப்பாக உள்ளதா என ஆய்வு செய்தார்.
மேலும் பேருந்தில் திடிரென தீ விபத்து ஏற்படும் போது அதனை, எவ்வாறு உடனடியாக அனைக்க வேண்டும் என்பது குறித்து ஓட்டுனர்களுக்கு தீயணைப்பு துறையினர் செய்து காண்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதிரன் உள்ளிட்ட போக்குவரத்து அலுவலர்கள் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக