இக்கூட்டத்தில் கலந்து கொண்டு டிடிவி தினகரன் சிறப்புரையாற்றினார் . இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், அதிமுக செயற்குழு உறுப்பினர்களுக்கு இருபத்தி ஐந்து லட்சம் முதல் ஐந்து கோடி வரை பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது என்று தான் தெரிவித்தேன். இதற்கு கேபி முனுசாமி மான நஷ்ட வழக்கு தொடர்வதாக பேட்டி அளித்திருக்கிறார். மான நஷ்ட வழக்கு தொடர்ந்தால் அதனை சந்திப்பேன். பொதுமக்கள் பேசியதை தான் நான் பேசினேன். காலை 11 மணி வரை ஓ பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தருபவர்கள் மாலை எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளிக்கிறேன் என்று சொல்கிறார்கள் அவர்களுக்கு என்ன ஞானோதயம் வந்தது.
குற்றம் உள்ள நெஞ்சு குறுகுருக்கிறது, சொல்லப்படுகிறது சொல்கிறார்கள் என்று தான் தெரிவித்தேன் நான் நேரடியாக பார்த்தால் பார்த்தேன் என்று சொல்லி இருப்பேன். தஞ்சாவூரில் பணம் வழங்கியதாக கூறியதை தான் நான் கூறினேன். தேர்தல் ஆணையத்தில் அமமுக முறையாக பதிவு செய்து தனியாக சின்னம் பெற்று ஜனநாயக முறைப்படி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் தவறான ஆட்சி இருந்ததால் மக்கள் திமுகவிற்கு வாய்ப்பு அளித்திருக்கிறார்கள்.
அவர்களை எதிர்த்து போராடி அமமுக ஆட்சியர் பிடிக்கும், அதிமுகவில் பொதுக்குழு நடந்தால் என்ன பொதுச் செயலாளர் பதவியார் வந்தால் என்ன வரவில்லை என்றாலும் என்ன? ஜெயக்குமார் ஆடு நனைகிறதே ஓநாய் அழுகிறது என்று பேசியிருக்கிறார். ஓநாய் கூட்டங்களே இவர்கள் தான். ஜெயலலிதா இருக்கும் பொழுது ஆடுகளாக இருந்தவர்கள் ஓநாய்களாக மாறிவிட்டார்கள். அதிமுகவில் பொது செயலாளர் இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி ஒற்றை தலைமை இரட்டை தலைமை மூன்று தலை தல அஜித்தை கூறுவார்களே அதைப்போல ஐந்து தலை வந்தாலும் கவலை இல்லை நாங்கள் இலக்கை நோக்கி அர்ஜுனன் போல் பயணிக்கிறோம் என்று செய்தியாளர் சந்திப்பில் டிடிவி தினகரன் பேசினார்.
இதில் தர்மபுரி அமுமுக மாவட்ட செயலாளர் டி கே ராஜேந்திரன், அரூர் முன்னாள் எம்எல்ஏ ஆர் முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக