பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரேமலதா விஜயகாந்த தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 3 ஜூலை, 2022

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரேமலதா விஜயகாந்த தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாளையம்புதூர், சேஷம்பட்டி, அகரம் ரோடு, வெள்ளக்கல், தொப்பூர் கணவாய் ஆகிய இடங்களில் மேம்பாலம் அமைத்தல், காவிரி உபரி நீரை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு கொண்டுவருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னதாக கோரிக்கை கோஷம் எழுப்பப்பட்டது பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பேசுகையில் ஒகேனகல் படகு ஓட்டுபவர்களின் படகு எரிக்கப்பட்டதை கண்டனம் எழுப்பப்பட்டது, ஒகேனக்கல்லிருந்து உபரி நீரை மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு கொண்டு செல்ல ஆர்ப்பாட்டம் எழுப்பப்பட்டது.

தற்போதைய தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. DNV. S. செந்தில்குமார்  அவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது, தொப்பூர் மேம்பாலம், காரிமங்கலம் மேம்பாலம் மற்றும் மற்றும் பாளையம் புதூர் மேம்பாலம் ஆகிய பணிகளை உடனடியாக கோரிக்கை எழுப்பப்பட்டது.

இதில் தேமுதிக மாவட்ட நகர ஒன்றிய கழக பேரூராட்சி நிர்வாகிகள்  கலந்து கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad