தர்மபுரி மாவட்டம் அரூரில் உள்ள கச்சேரி மேடு நான்கு ரோடு திருவிக நகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தினசரி 200 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பேருந்துகள் செல்கின்றன.
இந்நிலையில் இப்பகுதிகளில் தினசரி மாடுகள் சாலையில் சுற்றி திரிவதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதுடன் கால்நடைகள் அடிக்கடி விபத்தில் சிக்கி இறந்து விடுகின்றனர், மேலும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் சாலையை கடந்து வருகின்றன.
இந்நிலையில் சாலையில் சுற்றி தெரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கால்நடைகளை சாலையில் அவிழ்த்து விடாமல் முறையாக அதனை பராமரிப்பு செய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக