இந்நிகழ்வில் அரசு மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியை டாக்டர் பிரியா, அரசு தலைமை மருத்துவ மனை இரத்த வங்கியின் மருத்துவ அலுவலர் டாக்டர் லாவண்யா மற்றும் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கிய இளைஞர்களை பாராட்டினர். இரத்த தான நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற தேசிய இளைஞர் தொண்டர்களான ஜெய்கணேஷ், ஞானராஜ், முனியப்பன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தது குறிப்பிடதக்கது.
மேலும் டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு இணைய வழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் தருமபுரி அரசு சட்டக்கல்லூரி யில் நடைப்பெற்றது.கல்லூரி முதல்வர் முனைவர் சிவதாஸ் வரவேற்று பேசினார். .தருமபுரி குற்றப்பிரிவு காவல் அலுவலகம் சார்பில் உதவி காவல் ஆய்வாளர் சரண்யா காவலர்கள் தர்மதுரை, அனிதா ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.
நோக்கவுரையினை நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் அவர்கள் வழங்கினார்.பேராசிரியை ரேகா சிறப்புரை வழங்கினர். இறுதியில் நேரு யுவ கேந்திராவின் தேசிய இளைஞர் தொண்டர் அரிபிரசாந்த் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக