பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய புதிய கட்டிடத் திறப்பு விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 7 ஜூலை, 2022

பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய புதிய கட்டிடத் திறப்பு விழா.

பெரியார் பல்கலைக்கழக  பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்திக்கென  தர்மபுரி மாவட்டம் பூமாண்டஅள்ளி கிராமத்தில் அமைந்துள்ள புதிய கட்டடத் திறப்பு விழா  மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சியின் வாயிலாக திறந்து வைக்கப்பட்டது. 

தொடர்ந்து தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி சாந்தி அவர்கள் குத்துவிளக்கேற்றினார். மேலும் பென்னாகர சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஜி கே மணி அவர்கள் சிறப்புரை வழங்கினார், அதில் இப்பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்திற்கான விடுதி வசதிகள் ஏற்படுத்தி தருவதற்கான முயற்சிகளை எடுப்பதாக உறுதி அளித்தார்.

பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் முனைவர் கோபி மற்றும் பெரியார் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பேராசிரியர் முனைவர் கதிரவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

தொடர்ந்து பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய ஆய்வகங்கள் வகுப்பறைகள் மற்றும் அலுவலக அறைகளை சிறப்பு விருந்தினர்கள் பார்வையிட்டனர். இறுதியாக பல்கலைக்கழக பட்டம் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் முனைவர் மோகனசுந்தரம் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். 

முன்னதாக நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் ஆங்கிலத்துறை இணை பேராசிரியர்  முனைவர் கோவிந்தராஜ் வரவேற்று பேசினார், இந்நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் துறை தலைவர்கள் பேராசிரிய பேராசிரியர்கள் ஆய்வு மாணாக்கர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.


கருத்துகள் இல்லை:

Post Top Ad