அரூர் அருகே சாலை இன்றி தவிக்கும் அருந்ததியின மக்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 4 ஜூலை, 2022

அரூர் அருகே சாலை இன்றி தவிக்கும் அருந்ததியின மக்கள்.

அரூர் அருகே எல்லைப்புடியாம்பட்டி  பஞ்சாயத்துக்குட்பட்ட கெளாப்பாறை கிராமத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட அருந்ததி இன குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் மற்ற இனத்தவர்களுக்கு தனி தனியாக சாலை, சுடுகாடும் வசதி உண்டு. அருந்ததி இன மக்களுக்கு மட்டும் சாலை வசதி இன்றி தவித்து வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில் நூறாண்டுகளுக்கு மேலாக எங்கள் கிராமத்தில்  உள்ள பள்ளி மாணவ, மாணவிகள், கிராம மக்கள், மற்றும் சுடுகாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வந்த சாலை திடீரென முள்வேலி அமைத்து அடைக்கப்பட்டது. அடைக்கப்பட்ட சாலையில் அரசு புறம்போக்கு நிலம் கொஞ்சமும், அதே போன்று பட்டா நிலமும் உள்ளது. எங்கள் குடியிருப்பு பகுதி இரு சமூகத்தினர் வசிக்கும் மையப்பகுதியில் அமைந்தது.

எங்கள் கிராமத்துக்கு சாலை வசதி வேண்டுமென மாவட்ட கலெக்டர், அரூர் ஆர்டிஓ, தாசில்தார் ஆகியோரிடம் பலமுறை மனு கொடுத்தோம். இன்று வரை புகார் மனு மீது அதிகாரிகள் விசாரணை மட்டுமே நடைபெற்றது. தொடர்ந்து சாலை வசதி இல்லாமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறோம். பள்ளி செல்லும் மாணவர்கள் கிராமத்தை சுற்றி செல்வதால் காலதாமதம் ஏற்பட்டு பள்ளியில் வெளியில் நிறுத்தி வைக்கப்படுகின்றனர். 

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அரூர் பகுதியில்  திமுக சார்பில் உங்கள் தொகுதியில் ஸ்டாலினின் என்று நடைபெற்ற முகாமில்  கெளாப்பாறை  கிராமத்திற்கு சுடுகாட்டு சாலை வசதி வேண்டுமென மனு கொடுத்தோம். திமுக ஆட்சி அமைத்து ஓராண்டு ஆகியும் எந்த ஒரு பலனும் இல்லை என அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad