தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்து கே. அக்ரஹாரம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் பக்தர்களுக்கு அனைவருக்கும் முககவசம் (மாஸ்க்) அணிய வேண்டும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், வீட்டிற்கு சென்றவுடன் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்று விழிப்புணர்வு செய்த டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக விழிப்புணர்வு செய்யப்பட்டது.
இதில் இந்திய ராணுவத்தில் ஓய்வு பெற்ற தீ.திருப்பதி ஐயா அவர்கள் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு முகக்கவசத்தை வழங்கினார், மாஸ்க் வழங்கிய நண்பர்கள் கேசவன் ஈச்சம்பாடி, சிங்காரம், பாலசுப்ரமணி, கிராம நிர்வாக அலுவலர்கள் ஈச்சம்பட்டி காலனி, இதில் 800க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கலந்துகொண்டு முககவசத்தை அணிந்து கொண்டனர்.
இதில் பசுமை தேசம் நண்பர்கள் குழு சார்பாக R.அண்ணாசாமி R.திருவருட்செல்வம், சுகாதாரபயிற்சி மாணவர் மனோ மற்றும் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் பசுமை தேசம்இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக நா .சின்னமணி மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக